உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமான தென்னேரிப்பட்டு சாலை ரூ.1.5 கோடியில் சீரமைப்பு துவக்கம்

சேதமான தென்னேரிப்பட்டு சாலை ரூ.1.5 கோடியில் சீரமைப்பு துவக்கம்

சூணாம்பேடு,:கடுமையாக சேதமடைந்திருந்த தென்னேரிப்பட்டு சாலை, 1.5 கோடி ரூபாயில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் துவங்கி உள்ளன.சூணாம்பேடு அருகே வேலுார் கிராமத்தில் இருந்து, தென்னேரிப்பட்டு கிராமத்திற்குச் செல்லும் 2 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.சின்னகளக்காடி, வேலுார், தென்னேரிப்பட்டு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளாக சாலை கடுமையாக சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியதால் பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த நிலையில்,ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ், 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை நடுவே கால்வாய்களை கடக்கும் பகுதியில், மூன்று சிறுபாலங்கள் அமைத்து, 2.18 கி.மீ., துாரத்திற்கு சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, தனியார் நிறுவனத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டு, சாலை சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை