உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் நிறுவனத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டுகோள்

மாற்றுத்திறனாளிகள் நிறுவனத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டுகோள்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காட்டில், இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ், ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்படுகிறது.இந்நிறுவனம் 2005ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.இந்த நிறுவனம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை -மாமல்லபுரம், கோவளம் இடையே 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல், தென்மாவட்ட பேருந்துகளும் இந்த நிறுவனத்தின் வழியாகவே செல்கின்றன.கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, இந்நிறுவனம் சார்ந்த பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கு, பேருந்துகள் நின்று செல்லும். ஆனாலும் மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர்கள் என அனைவரும் சாலையைக் கடந்து வரும் போது சிரமப்படுகின்றனர். எனவே, அனைவரின் நலன் கருதி, அனைத்து பேருந்துகளும் நிறுவன வளாகத்தின் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை