உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்மாற்றி கம்பம் சேதம் மாற்றித்தர வேண்டுகோள்

மின்மாற்றி கம்பம் சேதம் மாற்றித்தர வேண்டுகோள்

மதுராந்தகம்,:மதுராந்தகம் அருகே கே.கே.புதுார் -- பூண்டி நகர் செல்லும் சாலையோரம் குடியிருப்புகள் உள்ள பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.பல மாதங்களாக, மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள கம்பங்கள், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதுடன், பலம் இழந்த நிலையில் உள்ளன.இதுகுறித்து, அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள பழைய மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய கம்பங்கள் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ