உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை இணைப்புக்கு முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட கோரிக்கை

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை இணைப்புக்கு முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட கோரிக்கை

திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., --- - இ.சி.ஆர்., சாலையை இணைக்கும் வகையில், முட்டுக்காடு பகுதியில் பாலம் கட்ட வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.சென்னைக்கு அருகே வளர்ந்து வரும் புறநகர் பகுதியான முட்டுக்காடு ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். முட்டுக்காடு ஊராட்சி பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை என இரண்டு முக்கிய சாலைகளிலும் உள்ளது.இவ்வூராட்சியில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஏகாட்டூர், வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர் ஆகிய கிராமங்களும் உள்ளன.முட்டுக்காடு ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் போன்றவை ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ளது. இ.சி.ஆர்., சாலையில் இருந்து இந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கோவளம் சென்று, அங்கிருந்து ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள கேளம்பாக்கம் வந்து, கேளம்பாக்கத்தில் இருந்து ஏகாட்டூர் வரவேண்டும் இவ்வாறு 10 கி.மீ., தூரம் சுற்றிக்கொண்டு வர வேண்டும்.அல்லது இப்பகுதி மக்கள் அக்கரை, சோழிங்கநல்லுார், நாவலுார் வழியாக 20 கி.மீ. துாரம் சுற்றி வர வேண்டும்.முட்டுக்காட்டில் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலை இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாய் இடையே பாலம் அமைத்தால் 2 கி.மீ., துாரத்தில் செல்லலாம். ஒரே ஊராட்சியில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வழி இல்லாததால் மக்கள் சுற்றி சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக இப்பாலம் அமைத்தால் முட்டுக்காடு ஊராட்சி மக்களுக்கும் மட்டும்மல்லாமல், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள மற்ற பகுதி மக்களுக்கும், இ.சி.ஆர்., சாலைக்கு செல்ல உதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை