தையூரில் கழிவுநீர் தேங்கும் கால்வாயை துார்வார கோரிக்கை
திருப்போரூர்:தையூர் ஊராட்சி வீராணம் கால்வாயை துார் வார வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில், ஓ.எம்.ஆர்., சாலையில் இருந்த வீராணம் சாலை பிரிந்து செல்கிறது.இச்சாலையை ஒட்டியுள்ள கால்வாய் வழியாக மழைநீர், கழிவுநீர் செல்கிறது. இந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் குப்பை குவிந்து, கோரைப் புற்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.அதேபோல் தையூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டியுள்ள கால்வாயிலும், குப்பை குவிந்துள்ளது.எனவே, இந்த வீராணம் கால்வாயில் உள்ள கழிவுகள், கோரைப்புற்கள், செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.