உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொண்டமங்கலம் சாலையில் சிறுபாலம் அமைக்க கோரிக்கை

கொண்டமங்கலம் சாலையில் சிறுபாலம் அமைக்க கோரிக்கை

மறைமலைநகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கோவிந்தாபுரம் -- அனுமந்தபுரம் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையில் உள்ள சிறு பாலம் வழியாக, கொண்டமங்கலம் ஏரியில் இருந்து சுற்றியுள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாமல், குழாய்கள் துார்ந்து போய் காணப்படுகின்றன.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த சாலையை கொண்டமங்கலம், தர்காஸ், தாசரிகுப்பம் உள்ளிட்ட கிராம மக்கள், மறைமலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.சிறு தரைப்பாலம் அருகில் சாலை சேதமடைந்தும், ஒரு சில இடங்களில் சாலையோரம் செடிகள் வளர்ந்தும் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சென்று வரும் சூழல்உருவாகி உள்ளது.எனவே, இங்கு சிறுபாலம் அமைக்கவும், சாலையோரம் உள்ள புதரை அகற்றவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ