உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்

கூவத்துார்:பெருந்துறவு அரசுப் பள்ளி அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து உள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது.கூவத்துார் அருகே பெருந்துறவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு ஆரம்பப் பள்ளி அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, சிமென்ட் கலவைகள் உதிர்ந்து உள்ளன. இதனால், தொட்டி பலவீனமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக, பள்ளி அருகே பழுதடைந்துள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ