உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொன்மாரில் வங்கி கிளை அமைக்க வேண்டுகோள்

பொன்மாரில் வங்கி கிளை அமைக்க வேண்டுகோள்

திருப்போரூர்:வளர்ந்து வரும் ஊராட்சியான பொன்மாரில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை இல்லாததால், வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் அருகே பொன்மார் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஹவுசிங் போர்டு, மலைத்தெரு, போலச்சேரி என, துணை கிராமங்கள் உள்ளன.மேலும், இரண்டு தனியார் கல்லுாரிகள், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்பு, மனை பிரிவுகள் உள்ளன.இப்பகுதியில் வங்கி கிளை இல்லாததால் மாம்பாக்கம், கண்டிகை, மேடவாக்கம், கேளம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வங்கிகளுக்கு பொதுமக்கள் சென்று சிரமப்படுகின்றனர்.எனவே, பொன்மார் மக்களின் பிரச்னையை தீர்க்க, இப்பகுதியில் தனியார் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை