உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கத்தில் காலி இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கத்தில் காலி இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள காலி இடத்தில், பூங்கா அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.அச்சிறுபாக்கம் பகுதியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.அதில் திம்மாபுரம், திருமுக்காடு, எலப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்குச் செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து, புறவழிச் சாலை ஏற்படுத்தப்பட்டது.அதில், புறவழிச் சாலையில், மேம்பாலத்தின் வலது மற்றும் இடதுபுறங்களில் காலியிடங்கள் உள்ளன.இங்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், பேரூராட்சி வாயிலாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டன.நாளடைவில் உரிய பராமரிப்பு இல்லாததால், மரக்கன்றுகள் காய்ந்து வீணாகின.பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், இப்பகுதியில் இரவு நேரங்களில் ஓய்வெடுப்பதால், மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர், புறவழிச் சாலையில் உள்ள காலி இடத்தில், மீண்டும் அழகு தரும் மரக்கன்றுகளை நட்டு, கம்பி வேலி அமைத்து பராமரிக்க வேண்டும். மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா ஏற்படுத்தவும் வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ