உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாஸ்திரம்பாக்கம் சுடுகாட்டிற்கு பாதை அமைக்க வேண்டுகோள்

சாஸ்திரம்பாக்கம் சுடுகாட்டிற்கு பாதை அமைக்க வேண்டுகோள்

மறைமலைநகர்:சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில், சுடுகாட்டிற்க்கு செல்ல பாதை அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்த கிராம மக்கள் ஊருக்கு வெளியில் உள்ள காலி இடத்தை பல ஆண்டுகளாக சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டிற்கு முறையான பாதை, விளக்குகள், எரிமேடை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், இறந்தர்களின் உடலை எடுத்துச் செல்லவும், அடக்கம் செய்யவும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.விபத்து சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின், இரவு நேரங்களில் அடக்கம் செய்யும் போது உறவினர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே இந்த சுடுகாட்டிற்கு பாதை, எரிமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ