உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருப்போரூரில் விடுபட்ட மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

 திருப்போரூரில் விடுபட்ட மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் வட்டத்தில் கடந்த முறை பட்டா வழங்காமல் விடுபட்ட மக்களுக்கு, பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் வட்டத்தில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த வட்டத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்த சிலருக்கு, வருவாய்த் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதிகள் இருந்தும் பலருக்கு, பட்டா வழங்கப்படவில்லை. வீட்டிற்கு பட்டா இல்லாததால், அரசு சார்ந்த திட்டங்களான வங்கிக் கடன், தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு, கனவு இல்லம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இலவச பட்டா கோரி இப்பகுதி மக்கள், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம், மாவட்ட குறைதீர் கூட்டம்' என, பல்வேறு முகாம்களில் மனு அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை பட்டா கிடைக்கவில்லை. எனவே, திருப்போரூர் வட்டத்தில் கடந்த முறை பட்டா வழங்காமல் விடுபட்ட மக்களுக்கு, பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ