மேலும் செய்திகள்
சோளிங்கர் அரசு கல்லுாரி கட்டுமான பணி தீவிரம்
07-Mar-2025
செங்கல்பட்டு:அரசு கலைக்கல்லுாரி பகுதியில், மாணவியர் நலன் கருதி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இங்கு செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.மதுராந்தகம் பகுதியில் இருந்து வரும் மாணவியர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நடந்து கல்லுாரிக்கு வருகின்றனர்.இதேபோன்று, செங்கல்பட்டு புதிய மற்றும் ராட்டிணங்கிணறு பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இறங்கி நடந்து வரும் மாணவியர், சாலையோரம் நடந்து வருகின்றனர்.இவர்களை, அங்கு காத்திருக்கும் சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாணவியர் பாதுகாப்பு கருதி, காலை மற்றும் கல்லுாரி விடும் நேரங்களில், போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். கல்லுாரி அருகிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
07-Mar-2025