மேம்பாலங்களில் மரக்கன்றுகள் அப்புறப்படுத்த வேண்டுகோள்
செங்கல்பட்டு:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் இருங்குன்றம் பள்ளி மற்றும் செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலை சந்திப்பு ஆகிய இரண்டு இடங்களில், மேம்பாலங்கள் உள்ளன. இந்த மேம்பாலத்தின் இருபுறமும், மரக்கன்றுகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக, பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.மேலும், இந்த பகுதியில் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி, சில நேரத்தில் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.எனவே, இந்த மேம்பாலங்களில் உள்ள மரக்கன்றுகளை அகற்றவும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கவும், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.