உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அங்கன்வாடி மீது வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அகற்ற கோரிக்கை

 அங்கன்வாடி மீது வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அகற்ற கோரிக்கை

செய்யூர்: முதலியார் குப்பம் கிராமத்தில், அங்கன்வாடி மீது வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார் குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், பழைய பள்ளி கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில் 10 குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி மையம் பழைய பள்ளி கட்டடத்தில் செயல்படுவதால், முறையான பராமரிப்பு இல்லாமல், கட்டடத்தின் மீது அரசமர கன்றுகள் வளர்ந்து வருகின்றன. இதனால் கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மைய கட்டடத்தின் மீது வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அகற் ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி