உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆக்கிரமிபை அகற்றி சிக்னல் அமைக்க கோரிக்கை

ஆக்கிரமிபை அகற்றி சிக்னல் அமைக்க கோரிக்கை

திருப்போரூர் : கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலையில் உள்ள மாம்பாக்கம் சந்திப்பு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றி, சிக்னல் அமைக்க வேண்டும் என, அப்பகுதி ஊராட்சி துணைத்தலைவர், அமைச்சர் அன்பரசனிடம் குறைத்தீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில், வண்டலுார் - -கேளம்பாக்கம் மற்றும் மாம்பாக்கம் - -மேடவாக்கம் கூட்டுச்சாலை அமைந்துள்ளது.இச்சாலை ஒட்டி தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், இக்கூட்டுச் சாலையில், தினசரி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்தும் ஏற்படுகிறது.எனவே, மாம்பாக்கம் கூட்டுச்சாலை ஓட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சிக்னல் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை