மேலும் செய்திகள்
புகார் பெட்டி ஊராட்சி அலுவலகம் கட்டப்படுமா?
04-Feb-2025
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பெருக்கரணை ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பேரம்பாக்கம் சாலை ஓரத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது.நாளடைவில், பராமரிப்பின்றி கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இ - சேவை மைய கட்டடத்திற்கு, ஊராட்சி மன்ற அலுவலகம் மாற்றப்பட்டு, தற்போது செயல்படுகிறது.இ - சேவை மையத்தில் போதிய இடவசதி இல்லாமல் கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்த முடிவதில்லை. மேலும், பல்வேறு சேவைக்காக வரும் பொதுமக்கள் அமரவும், போதிய இடவசதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், பெருக்கரணை ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
04-Feb-2025