மேலும் செய்திகள்
லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
25-Aug-2025
திருப்போரூர்:கேளம்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, பயணியர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு, தாம்பரம், கிளாம்பாக்கம், பிராட்வே, கோயம்பேடு, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன. இந்நிலையில், இப்பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் உள்ளது. எனவே, கேளம்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Aug-2025