உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொசு மருந்து அடிக்கும் பணி வேகப்படுத்த கோரிக்கை

கொசு மருந்து அடிக்கும் பணி வேகப்படுத்த கோரிக்கை

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாம்பரம் மாநகராட்சி மண்டலங்களில் சமீபகாலமாக கொசு மருந்து முறையாக அடிப்பதில்லை. இதனால், கொசு தொல்லை அதிகரித்து, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில், பல பகுதிகளில் கொசு மருந்து அடிப்பதே இல்லை. பல இடங்களில் வாரத்திற்கு ஒரு முறையும், சில இடங்களில் தேவைப்படும் போதும் அடிக்கின்றனர். ஒரு அட்டவணை வைத்து, ஒவ்வொரு வார்டிலும் முறையாக அடிப்பதில்லை. இதனால், கொசு தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மழை துவங்கவுள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி, 70 வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணியை வேகப்படுத்தி, கொசுவை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை