உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சமுதாய நலக்கூடம் அமைக்க கூவத்துார்வாசிகள் எதிர்பார்ப்பு

சமுதாய நலக்கூடம் அமைக்க கூவத்துார்வாசிகள் எதிர்பார்ப்பு

கூவத்துார்:கூவத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கூவத்துார் பகுதியில் சமுதாயக் கூடம் வசதி இல்லாததால், தென்பட்டினம், அடையாளச்சேரி, கீழார்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் வசிப்போர், கடும் அவதியடைந்து வருகின்றனர்.மேலும், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த, தனியார் மண்டபம் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வரும் கூவத்துார் பஜார் பகுதியில், பல ஆண்டுகளாக சமுதாயக்கூடம் அமைக்க, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.ஆனால், தற்போது வரை அமைக்கப்படாததால், இப்பகுதிவாசிகள் தனியார் மண்டபத்தில் அதிகம் பணம் செலுத்தி, சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பொதுமக்கள் நலன் கருதி, கூவத்துார் பஜார் பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்து, அதன் வாயிலாக ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை