உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைந்த மின்னழுத்த பிரச்னை வடநெம்மேலிவாசிகள் அவதி

குறைந்த மின்னழுத்த பிரச்னை வடநெம்மேலிவாசிகள் அவதி

திருப்போரூர்:திருப்போரூர் அருகே இ.சி.ஆர்., சாலையில், வடநெம்மேலி ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சியில், 400 வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு, கோவளம் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இதனால் மின் விசிறி, பிரிஜ் போன்ற மின்சாதனங்களை இயக்க முடியாமல், பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.குறிப்பாக, இரவில் கொசுத் தொல்லையால் தவித்து வருகின்றனர்.சில நேரங்களில், வீட்டு உபயோக மின் சாதன பொருட்களும் பழுதடைந்து விடுகின்றன. இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், இந்த குறைந்த மின்னழுத்தம் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:இப்பகுதியில் மின் அழுத்த குறைபாடு பிரச்னை, கடந்த இரண்டு மாதங்களாக உள்ளது. இதனால், மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. மின் விசிறி இயக்க முடியாமல், இரவில் துாங்க முடியவில்லை. மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து சீராக மின்சாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ