உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைமலைநகர் : மறைமலைநகர் - திருவள்ளுவர் சாலை அரசு நுாலகம் நுழைவாயிலில், திருவள்ளுவர் சிலை உள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்போரூர்

திருப்போரூர் தமிழ்சங்கம் சார்பில், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, பேரூராட்சி இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு, திருவள்ளுவர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தமிழ் சங்க தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். தமிழ் சங்கம் மற்றும் தமிழ் முற்றம் அமைப்பின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் என, பலர் பங்கேற்றனர். பின், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து, எழுத்தாளர் சமரன் எழுதிய 'மணியக்காரன் முதலியார் சத்திரம்' ஆசிரியர் உதயா ஆதிமூலம் எழுதிய 'வேண்டிய பத்து வேண்டா பத்து' என்ற புத்தக வெளியீட்டு விழாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை