உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் உலர்த்தப்படும் கேழ்வரகால் அபாயம்

சாலையில் உலர்த்தப்படும் கேழ்வரகால் அபாயம்

சித்தாமூர்:சித்தாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். கிணறு, ஏரி போன்ற நீர்ப்பாசனம் வாயிலாக, 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.போந்துார் சாலை சந்திப்பு பகுதியில் நெற்களம் வசதி இல்லாததால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல், கேழ்வரகு போன்றவற்றை மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மற்றும் போந்துார் - கயப்பாக்கம் சாலையில் உலர்த்தி வருகின்றனர்.இச்சாலை வழியாக, தினமும் எராளமான வாகனங்கள் கடந்து செல்வதால், சாலையில் உலர்த்தப்படும் நெல், கேழ்வரகு போன்றவற்றில் வழுக்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயநிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நெற்களம் வசதி இல்லாத பகுதிகளில் புதிய நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி