மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
14-Jun-2025
மது பாட்டில் கடத்தல் ஒருவர் கைது
24-May-2025
திருப்போரூர்:திருப்போரூர் அருகே ஒரே இரவில் நான்கு பேரிடம் மொபைல் போன், பணம் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் இம்தியாஸ், 40, இவர் கண்டிகையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.நேற்று முன்தினம் இரவு 11: 00 மணிக்கு பணி முடிந்து திருப்போரூர் வழியாக கல்பாக்கம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது பையனூர் அருகே மர்ம நபர்கள் 2 பேர் இம்தியாசை மடக்கி அவரிடம் பைக் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர்.சென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 45. இவர் அரசு பேருந்து நடத்துனர். நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் பைக்கில் சென்னைக்கு சென்றார். அவரை மடக்கிய இருவர் அவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் 1000 ரூபாய் பணத்தை பறித்தனர்.திருப்போரூர் ஆறுவழிச்சாலையில் சதீஷ்குமார், 30, என்பவரை மடக்கிய இருவர் சதீஷ்குமாரை தாக்கி அவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பறித்தனர். அதேபோல், படூர் ஆறுவழிச்சாலையில் தர்ஷன், 22 என்பவரை மடக்கி மொபைபோன் மற்றும் பணத்தை இரண்டு நபர்கள் பறித்தனர்.இது தொடர்பான புகார்படி போலீசார் அப்பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பத்து பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
14-Jun-2025
24-May-2025