உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுதல் வகுப்பறைகள் கட்ட கல்லுாரிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

கூடுதல் வகுப்பறைகள் கட்ட கல்லுாரிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், கூடுதலாக பத்து வகுப்பறைகள் கட்ட, தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர், 3,000த்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.கல்லுாரி வகுப்பறைகளில் போதிய இடம் இல்லாததால், இட நெருக்கடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், கூடுதலாக வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என, கல்லுாரி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியது.அதன்பின், பத்து வகுப்பறைகள் கட்ட, கடந்த அக்டோபர் மாதம், 10 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே, மாணவர்கள் நலன் கருதி, வகுப்பறை கட்டடங்கள் பணியை உடனடியாக துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை