உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கோவில்களின் உண்டியலில் ரூ.8 லட்சம் காணிக்கை

 கோவில்களின் உண்டியலில் ரூ.8 லட்சம் காணிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் மற்றும் கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில் ஆகியவற்றின் உண்டியல்களில் பக்தர்கள், 8 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளனர். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில்களின் உண்டியல்கள் சரக ஆய்வாளர் பாஸ்கரன் மேற்பார்வையில், நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. ஸ்தலசயன பெருமாள் கோவில் உண்டியலில் பக்தர்கள், 4 லட்சத்து 15 ஆயிரத்து 594 ரூபாய் செலுத்தி உள்ளனர். மாரி சின்னம்மன் கோவில் உண்டியலில், 3 லட்சத்து 84 ஆயிரத்து 189 ரூபாய், 29 கிராம் தங்கம், 129 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி