ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூட்டம்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க, மாவட்ட செயற்குழு கூட்டம், நடந்தது.மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார்.இதில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு பணி நெருக்கடி கொடுப்பது மற்றும் காலம் கடந்த ஆய்வுக் கூட்டங்கள் பற்றி பேசப்பட்டது.பொதுமக்களிடம் கட்டாயமாக வீட்டு வரி, குடிநீர் வரியை ஊராட்சி செயலர்கள் வசூலிக்க கோரி, அதிகாரிகள் நிர்பந்திப்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சித்தாமூர், லத்துார் ஒன்றியத்தை சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.