உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் சார்-பதிவாளர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

செய்யூர் சார்-பதிவாளர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

செய்யூர், செய்யூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல், பத்திரப் பதிவுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.செய்யூர் பஜார் வீதியில், மாவட்ட கிளை நுாலகம் அருகே சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இங்கு வீடு, நிலம் வாங்குதல், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் 'செட்டில்மென்ட்' போன்ற 50 முதல் 80 பத்திரங்கள் வரை தினமும் பதிவு செய்யப்படுகின்றன.இதனால் தினமும், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.இங்கு குடிநீர் வசதி இல்லாததால், மதிய நேரத்தில் பத்திரப்பதிவிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் தவிக்கின்றனர்.எனவே, பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள், இந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !