மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
29-Oct-2024
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடந்தது. இதில், தானியியங்கியில் நீர் பாய்ச்சுதல், தானியியங்கியில் சுங்கச்சாவடி செயல்படுதல், கண்ணாடி பிரதிபலிப்பில் தெருவிளக்கு எரிதல் உள்ளிட்ட 85 படைப்புகள் மற்றும் மூலிகை செடி வளர்ப்பின் பயன்கள் குறித்து காண்காட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.இந்த கண்காட்சியை பெற்றோர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிவாசிகள் என, பலரும் பள்ளிக்கு வந்து பார்வையிட்டனர்.தொடர்ந்து, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, மூன்று பிரிவுகளாக பிரித்து, அதில் மாணவர்களின் சிறந்த படைப்புகளை நடுவர் வாயிலாக தேர்வு செய்யப்பட்டன.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.
29-Oct-2024