உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாற்றில் கல்லுாரி மாணவர் மாயம் தேடுதல் பணி தொடர்கிறது

பாலாற்றில் கல்லுாரி மாணவர் மாயம் தேடுதல் பணி தொடர்கிறது

செங்கல்பட்டு: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சைப் அலிக்கான், 18. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியிலுள்ள, 'ஹோட்டல் மேனேஜ்மென்ட்' கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், திம்மாவரம் பகுதியிலுள்ள பாலாற்றில் குளிக்க, தன் நண்பர்கள் இருவருடன் சென்றார். அங்கு குளித்த போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, சைப் அலிக்கான் மாயமானார். உடனே அவரது நண்பர்கள், செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்த போது, அந்தபகுதியில் இருள் சூழ்ந்தது. இதனால், தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று காலை, தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலமாக, ஆற்றில் பல்வேறு இடங்களில் சைப் அலிக்கானை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல் முழுதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் இன்றும், சுற்றியுள்ள ஆற்றுப்பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி