உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 6 மாதமாக திறப்பு விழா காணாத செம்பூர் ஊராட்சி அலுவலக கட்டடம்

6 மாதமாக திறப்பு விழா காணாத செம்பூர் ஊராட்சி அலுவலக கட்டடம்

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே செம்பூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.இந்த் கட்டடம் பராமரிப்பு இன்றி நாளடைவில் பழுதடைந்ததால், மழைக்காலத்தில் ஊராட்சி சார்ந்த கோப்புகளை பாதுகாக்க அதிகாரிகள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இ - சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு, ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இ - சேவை மைய கட்டடத்தில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கிராம சபை கூட்டம் மற்றும் மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், சேவைக்காக வருவோர் அமரவும் போதிய இடவசதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த 2022 - 23ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 39.95 லட்சம் மதிப்பீட்டில், ஆறு மாதங்களுக்கு முன், புதிய ஊராட்சி அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது,எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை