உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர் மறைமலைநகரில் நோய் பரவும் அபாயம்

மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர் மறைமலைநகரில் நோய் பரவும் அபாயம்

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சியில், மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் கீழக்கரணை, பேரமனுார், தர்னீஸ்கொயர், திருக்கச்சூர், செங்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இங்கு 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. புறநகரில் வளர்ந்து வரும் பகுதி என்பதால், புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.இந்த பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாய்கள் வழியாக அருகில் உள்ள நீர்நிலைகளில் நேரடியாக கலக்கிறது.இந்த கால்வாய்கள் நீண்ட காலமாக சுத்தம் செய்து துார் வாரப்படாததால், கால்வாய்களில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.இந்த பகுதிகளில் கொசுக்கள் அதிகரித்து, தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.எனவே, இந்த பகுதிகளில் உள்ள கால்வாய்களை முறையாக துார் வாரி, கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை