சரவண பொய்கை குளத்தில் கழிவுநீரால் சீர்கேடு
தி ருப்போரூர் கந்தசுவாமி கோவிலை ஒட்டி, சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது. பக்தர்கள் இக்குளத்தில் நீராடி, கந்தபெருமானை வழிபட்டுச் செல்கின்றனர். கடந்த 400 ஆண்டுகளாக வற்றாத நிலையில் உள்ள இந்த திருக்குளம், இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. தற்போது, இக்குளத்தின் தென்மேற்கு மூலையில், கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.தயாளன், திருப்போரூர்.