வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கூடுவாஞ்சேரி டு நெல்லிக்குப்பம் ரோடு மிக மோசமாக உள்ளது.
செங்கல்பட்டு; புதுடில்லியில் உள்ள அகில இந்திய காவல் துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அகில இந்திய போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி, கடந்த 24 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.இருபாலருக்குமான இப்போட்டியில், அனைத்து மாநில போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் என, 704 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2023, 2024ம் ஆண்டுகளைத் தொடர்ந்து, நடப்பாண்டு மூன்றாம் முறையாக, 25வது அகில இந்திய போலீசார் துப்பாக்கி சுடும் போட்டியை, தமிழ்நாடு காவல் துறை நடத்துகிறது.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குமுளி ஊராட்சி, ஒத்திவாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு கமான்டோ பயிற்சி பள்ளி மைதானத்தில், போட்டிகள் நடக்கின்றன.நாளை மாலை 4:00 மணிக்கு, வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உடற்பயிற்சியகத்தில், போட்டி மற்றும் அதையொட்டி நடக்க உள்ள இதர விழாக்களை, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் துவக்கி வைக்கிறார்.இரண்டு நாட்களில், ரைபிள், ரிவால்வர், கார்பன் என, 13 பிரிவுகளில், இரு பாலருக்குமான போட்டிகள் நடக்கின்றன.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மார்ச் 21ம் தேதி மாலை 4:00 மணிக்கு, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி டு நெல்லிக்குப்பம் ரோடு மிக மோசமாக உள்ளது.