மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மணல் குவியலால் அபாயம்
14-Mar-2025
சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள்கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை 25 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சுற்றியுள்ள திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், இச்சாலையில் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலையை ஒட்டி கொளத்துார் பகுதியில் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தில், தாம்பரம் மாநகராட்சியில் இருந்து லாரிகள் வாயிலாக கொண்டு வந்து, குப்பை கொட்டப்படுகிறது.குப்பைகளை கொட்டி விட்டுச் செல்லும் லாரிகளில் கடைசியாக உள்ள குப்பையை, நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுனர்கள் தொடர்ந்து கொட்டி விட்டுச் செல்கின்றனர்.இதன் காரணமாக சாலையின் இருபுறமும் குப்பை மற்றும் மணல் திட்டுகள் பல்வேறு இடங்களில் பரவி காணப்படுகிறது. இதன் காரணமாக வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, சக வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாச பிரச்னைகளால் அவதியடைந்து வருகின்றனர்.மேலும், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மணல் திட்டுகள் மீது செல்லும் போது, சறுக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகிறனர்.எனவே, இவற்றை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-Mar-2025