உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை பயன்பாடு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை பயன்பாடு

மாமல்லபுரம்:மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கல்வித்திறன் மேம்பாட்டிற்கு, ஸ்மார்ட் வகுப்பறை துவக்கப்பட்டது.மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. மாமல்லபுரம், வடகடம்பாடி, காரணை மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து, மாணவ - மாணவியர், இங்கு பயில்கின்றனர். திருக்கழுக்குன்றத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுபுற மாணவியர், இங்கு பயில்கின்றனர்.இப்பள்ளிகளில் பயில்வோரின் கல்வித் திறனை மேம்படுத்த கருதி, நவீன ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க, ேஹன்ட் இன் ேஹன்ட் இந்தியா தன்னார்வ நிறுவனம், பள்ளிகளை தத்தெடுத்தது. க்ரெடிலா நிறுவன பங்களிப்பில், தற்போது வகுப்பறைகள் அமைத்துள்ளன. இத்தகைய வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தொடுதிரையில், ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, கல்வி தொடர்பான பாடங்கள், பொது அறிவு உள்ளிட்டவற்றை திரையிட்டு கற்பிக்கலாம். பாட குறிப்புகளை எழுதும் பலகையாக பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை