உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாளையூரில் வடிகால்வாய் வசதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

பாளையூரில் வடிகால்வாய் வசதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

செய்யூர்:பாளையூரில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.செய்யூர் அருகே பாளையூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வடிகால்வாய் வசதி இல்லாததால், குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோரத்தில் தேங்குகிறது. இதனால் செய்யூர் - போந்துார் சாலையோரத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, இரவு நேரத்தில் கொசுக்கடியால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி