தாயின் கள்ள காதலனை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த மகன் கைது
Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவரை கொலை செய்த வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூரைச் சேர்ந்தவர் யுவராஜ், 39. முடி திருத்தும் தொழில் செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக ஆறு ஆண்டுகளுக்கு முன், குழந்தைகளுடன் இவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம், திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகொளத்துாரில், வாடகை வீட்டில் குடியேறி யுவராஜ் வசித்தார். இவரது உறவினர் அஞ்சலை, மொபைல் போனில் யுவராஜை தொடர்புகொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. கடந்த 16ம் தேதி அஞ்சலை அங்கு சென்று பார்த்த போது, வீட்டை ஒட்டியுள்ள குளியலறையில், அழுகிய நிலையில் யுவராஜ் உடல் கிடந்துள்ளது. தகவலின்படி, திருக்கழுக்குன்றம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றிய போது, அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் விசாரணையில், திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்த வெற்றி என்கிற கன்னியப்பன், 24, என்பவரது தாயுடன், யுவராஜுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் கன்னியப்பன், திருப்போரூர் அடுத்த சிறுகுன்றம் பகுதியைச் சேர்ந்த கவினேஷ், 20, என்பவருடன் சேர்ந்து, யுவராஜை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து நேற்று, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.