உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

சித்தாமூர், சித்தாமூர் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில், செய்யூர் - போளூர் இடையே, சென்னை - விழுப்புரம் ரயில் தடத்தை கடக்கும் ரயில்வே கேட் உள்ளது. தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள், இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன.சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும், இந்த தடம் வழியாகவே செல்லும்.இந்நிலையில், நேற்று காலை 9:15 மணிக்கு, ரயில் தடத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த கேட் திடீரென உடைந்ததால், வாகனங்கள் ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேட் உடைந்ததால், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ், ரயில்வே கேட்டை கடந்து செல்ல சிக்னல் கிடைக்காமல், சிறுநாகலுார் பகுதியில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.பின், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் மேல்மருவத்துார் போலீசார், ரயில்வே கேட்டில் போக்குவரத்தை சீரமைத்த பின், சோழன் எக்ஸ்பிரஸ் கடந்து சென்றது.தேசமடைந்த ரயில்வே கேட் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.திடீரென ரயில்வே கேட் உடைந்த சம்பவத்தால், 2 மணி நேரம் செய்யூர் - போளூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல, அடிக்கடி ரயில்வே கேட் உடைந்து, போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை