உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில்வே மேம்பால ரவுண்டானா அருகே வேகத்தடை அவசியம்

ரயில்வே மேம்பால ரவுண்டானா அருகே வேகத்தடை அவசியம்

செங்கல்பட்டு:செ ங்கல்பட்டில், ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில், விபத்தை தவிர்க்க வேகத் தடை அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே ரவுண்டானா உள்ளது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இந்த ரவுண்டானா வழியாக சென்று வருகின்றன. மதுராந்தகம் செல்லும் வாகனங்களும், இந்த மேம்பாலம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நேற்று முன்தினம், இந்த ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்ற, செங்கல்பட்டு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் மணிகுமார், மேம்பாலத்திலிருந்து வேகமாக வந்த அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். எனவே, ரயில்வே மேம்பால இறக்கத்தில் உள்ள ரவுண்டானா பகுதியில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை மற்றும் போக்குவரத்து 'சிக்னல்' அமைக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில், வாகன போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில், போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி