உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 14 வயதினருக்கு வாலிபால் லீக் செயின்ட் பீட்ஸ் சாம்பியன்

14 வயதினருக்கு வாலிபால் லீக் செயின்ட் பீட்ஸ் சாம்பியன்

சென்னை:செயின்ட் பீட்ஸ் பள்ளி, டெஸ்லா ஸ்போர்ட்ஸ் இணைந்து, யூ - 14 வாலிபால் 'லீக்' போட்டியை, சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில், நேற்று நடத்தின. இதில், எட்டு அணிகள், 'லீக்' மற்றும் 'சூப்பர் லீக்' சுற்றுகள் அடிப்படையில் மோதின.அனைத்து 'லீக்' போட்டிகள் முடிவில், செயின்ட் பீட்ஸ், ஐ.சி.எப்., வித்யாநிகேதன், பிராட்வே செயின்ட் மேரிஸ் மற்றும் அடையார் வித்யாரத்னா ஆகிய நான்கு பள்ளி அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதிபெற்றன. 'சூப்பர் லீக்' சுற்றில், செயின்ட் பீட்ஸ் அணி, 30 - 17 என்ற கணக்கில் செயின்ட் மேரிஸ் அணியையும், மற்றொரு போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி, 30 - 26 என்ற கணக்கில் வித்யாநிகேதன் அணியையும் தோற்கடித்தன. அனைத்து போட்டிகள் முடிவில், செயின்ட் பீட்ஸ் முதலிடத்தை பிடித்து 'சாம்பியன்' கோப்பையை வென்றது.வித்யாநிகேதன், வித்யாரத்னா மற்றும் செயின்ட் மேரிஸ் அணிகள், அடுத்தடுத்த இடங்களை வென்றன. சிறந்த ஆட்ட நாயகனுக்கான விருதுகளை, செயின்ட் பீட்ஸ் லித்ரன், வித்யாரத்னா அஷ்வின், செயின்ட் மேரிஸ் லஷித் ஆகியோர் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி