வெளியம்பாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அச்சிறுபாக்கம்: வெளியம்பாக்கம் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், நேற்று நடந்தது. அச்சிறுபாக்கம் அருகே, வெளியம்பாக்கம் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், ஊராட்சி தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது. வெளியம்பாக்கம் மற்றும் கரசங்கால் ஊராட் சிக்கு உட்பட்ட மக்கள் பங்கேற்றனர். இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன. வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர். நேற்று நடந்த முகாமில், 700-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கரும்பாக்கம் திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சி அலுவலக வளாகத்தில், கரும்பாக்கம் மற்றும் முள்ளிப்பாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதில், இவ்விரு கிராம மக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். முகாமில், 150-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.