உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூணாம்பேடு- - புதுப்பட்டு சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

சூணாம்பேடு- - புதுப்பட்டு சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

சூணாம்பேடு, சூணாம்பேடு அடுத்த ஆரவல்லிநகர் பகுதியில், திண்டிவனம் செல்லும் சாலையை இணைக்கும் 1.5 கி.மீ., நீள புறவழிச்சாலை உள்ளது.சாலை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. புதுப்பட்டு,விளாம்பட்டு,புதுக்குடி ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது.இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்ததால், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.மேலும் இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.கடந்த 6 மாதங்களுக்கு முன் முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 89 லட்ச மதிப்பீட்டில், சாலை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வந்தது. பருவமழை குறுக்கிட்டதால், சாலைபணி நிறுத்தப்பட்டது.பருவமழை முடிந்தும் தற்போது வரை சீரமைப்புப் பணி துவங்கப்படாமல் உள்ளதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை சீரமைப்புப் பணியை துவங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை