உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தமிழர் பண்பாடு மாமல்லையில் அருங்காட்சியகம்

தமிழர் பண்பாடு மாமல்லையில் அருங்காட்சியகம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், குடவரைகள் காண்போரை கவர்கின்றன. உள்நாடு மட்டுமின்றி, சர்வதேச பயணியரும் கண்டு ரசிக்கின்றனர்.இச்சூழலில், சுற்றுலா வரும் பிற மாநில மற்றும் சர்வதேச பயணியர் தமிழக பண்பாடு, முற்கால, தற்கால வாழ்வியல் நடைமுறைகள் குறித்து அறிய, இங்கு தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மாமல்லபுரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இதை அமைக்க உள்ளதாக, சட்டசபையில் அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ