உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டீ கடை பூட்டை உடைத்து திருட்டு

டீ கடை பூட்டை உடைத்து திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் டீ கடை பூட்டை உடைத்து 90,000 ரூபாயை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு சின்ன நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முஜிபர் ரகுமான், 40. வேதாச்சலம் நகர் பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முஜிபர் ரகுமான் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த 90,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரையடுத்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை