மேலும் செய்திகள்
மறைமலைநகரில் கார் மோதி ஸ்வீட் மாஸ்டர் பலி
25-Apr-2025
டூ-வீலர் மோதி முதியவர் பலி
01-May-2025
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி சரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் நான்கு பேர், நேற்று மாலை செங்கல்பட்டில் இருந்து பெருங்களத்துார் நோக்கி, 'டாடா இண்டிகா' காரில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்றனர். இதில், ஒரு சிறுவன் காரை ஓட்டினார்.மறைமலைநகர் அடுத்த டென்சி பகுதியில் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த கேசவன், 17, என்ற சிறுவன் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார், மற்ற சிறுவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கேசவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து, பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
25-Apr-2025
01-May-2025