திருக்கழுக்குன்றம் மருத்துவமனைக்கு புதிய கட்டட கட்டுமானம் தீவிரம்
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் அரசு மருத்துவமனை இயங்குகிறது. இப்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், காய்ச்சல், மகப்பேறு, விபத்து காயம் உள்ளிட்டவற்றுக்கு, இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.தற்போது, உள்நோயாளிகள், புறநோயாளிகள் ஆகியோர் அதிகரிக்கும் சூழலில், இங்கு போதிய கட்டட வசதியில்லை.பல ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட குறுகிய பரப்பு கட்டடத்தில் தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. டாக்டர்கள், நர்ஸ்கள், நோயாளிகள் ஆகியோர், கடும் இடநெருக்கடியில் அவதிப்படுகின்றனர்.புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தப்பட்டு, சுகாதார துறை 5.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கடந்த பிப்.,ல் பூமி பூஜையுடன் புதிய கட்டட கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன.மருத்துவமனை வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தை இடித்து, அங்கு கீழ்தளம், மேல்தளம் என, இக்கட்டட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.