உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தம்பதியிடம் ரகளை நால்வருக்கு காப்பு

தம்பதியிடம் ரகளை நால்வருக்கு காப்பு

மறைமலைநகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க, தன் மனைவியுடன் சென்றார்.பணம் எடுத்து விட்டு வெளியே வந்த போது, அங்கு மது போதையில் இருந்த இளைஞர்கள், தம்பதியை கிண்டல் செய்து உள்ளனர்.இதுகுறித்து வெங்கடேசன் தட்டிக் கேட்ட போது, இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து வெங்கடேசன், மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட தெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 22, பீரதீஷ் குமார்,21, விக்னேஷ்,20, சுகுமார்,23, ஆகிய நால்வரை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை