உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஊராட்சி செயலக புதிய கட்டடம் ஒன்றரை ஆண்டாக வீணாகும் அவலம்

 ஊராட்சி செயலக புதிய கட்டடம் ஒன்றரை ஆண்டாக வீணாகும் அவலம்

செய்யூர் ; செம்பூர் ஊராட்சியில், ஒன்றரை ஆண்டுகளாக வீணாகி வரும் கிராம ஊராட்சி செயலக புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் அடுத்த செம்பூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பராமரிப்பின்றி, நாளடைவில் பழுதடைந்தது. இதனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி மன்றம் இ -- சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. இ -- சேவை மைய கட்டடத்தில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கிராம சபை கூட்டம் மற்றும் மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், சேவைக்காக வருவோர் அமரவும் போதிய இடவசதி இல்லாமல், அதிகாரிகள் மற்றும் மக்கள் சிரமப்படுகின்றனர். கடந்த 2022 -- 23ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 39.95 லட்சம் ரூபாயில், கடந்த ஆண்டு கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் என, ஒருங்கிணைந்த புதிய கிராம ஊராட்சி செயலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக, இந்த புதிய கிராம ஊராட்சி செயலகம் செயல்படாமல் உள்ளது. எனவே, ஊரக வளர்ச் சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய கிராம ஊராட்சி செயலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய கிராம ஊராட்சி செயலக கட்டடத்திற்கான திறப்பு விழா விரைவில் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்த சில நாட்களில் கட்டடம் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரப்பட உள்ளது. - பாலு, செம்பூர் ஊராட்சி தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ