உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் லிங்கா என்ற லிங்கேசன், 23. இவர் மீது மிரட்டல், கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. மறைமலைநகர் போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில், மறைமலைநகர் ரயில் நிலையம் அருகில் லிங்கேசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில் நிலையம் அருகில் உள்ள காட்டு பகுதியில் பதுங்கியிருந்த லிங்கேசனை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை