கஞ்சா கடத்திய மூவர் கைது
பெருங்களத்துார்:ஆந்திர மாநிலம், சித்துாரில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக, பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, முடிச்சூரை அடுத்து மதனபுரம் பகுதியில், நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை மடக்கி விசாரித்தனர். அதில், ஆட்டோ இருக்கையின் அடியில், 2.200 கிலோ கஞ்சா, பட்டாக்கத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவில் வந்த பெரம்பூர், அகரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், 22, பெருங்களத்துாரை சேர்ந்த ஆனந்த், 24, முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம், 21, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.இதில், ஆறுமுகம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர், சுங்கவார்சத்திரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் சிறை சென்று வந்தது, போலிசார் விசாரணையில் தெரியவந்தது.